விக்ரம் நடிக்கும் தாண்டவம் படத்தின் இசை வெளியீடு வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சென்னையில் பிரமாண்டமான முறையில் நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடத்துகின்றனர்.
யுடிவி தயாரிக்க, ஏஎல் விஜய் இயக்கும் படம் தாண்டவம். விக்ரம் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடிகளாக அனுஷ்காவும் எமி ஜாக்சனும் நடித்துள்ளனர்.
முக்கிய வேடத்தில் ஜெகபதிபாபு நடித்துள்ளார்.
ஜீவி பிரகாஷ்குமார் இசையமைக்க, பாடல்களை நா முத்துகுமார் எழுதியுள்ளார்.
இந்தப் படத்தின் காட்சிகளைப் பார்த்த திரையுலகின் முக்கிய நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் விஜய்யை பாராட்டி வருகின்றனர். சமீபத்தில் படம் பார்த்த நடிகர் விஜய்யும் பாராட்டியுள்ளார்.
இப்போது ஆடியோ வெளியீட்டை பிரமாண்டமாக நடத்துகிறார்கள். இயக்குநர்கள் பாலா, லிங்குசாமி உள்பட தமிழ் சினிமாவின் முக்கிய பிரமுகர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.
+ comments + 1 comments
vikram rockssssss
Post a Comment