சென்னை: விஜய் நடிக்க, கவுதம் மேனன் இயக்குவதாக இருந்த யோஹன் அத்தியாயம் ஒன்று, காலவரையின்றி தள்ளிப் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரும் அக்டோபரில் இந்தப் படம் தொடங்கும் என இயக்குநர் கவுதம் மேனன் கூறியிருந்த நிலையில், அதற்கு பதிலாக, ஏ எல் விஜய் இயக்கும் புதிய படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்து, கால்ஷீட்டும் ஒதுக்கிக் கொடுத்துள்ளாராம் விஜய். இந்தப் படத்தைத் தயாரிப்பவர் பிரபல பைனான்ஸியர் சந்திரபிரகாஷ் ஜெயின் என்பதை ஏற்கெனவே 'ஒன்இந்தியா தமிழ்' தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம்.
சமீபத்தில் ஏஎல் விஜய் தான் இயக்கிய தாண்டவம் படத்தை விஜய்க்குப் போட்டுக் காட்டியுள்ளார். அதைப் பார்த்துப் பாராட்டிய விஜய், 'அடுத்து நம்ம படம்தான். நவம்பரில் ஸ்டார்ட் பண்ணலாம்' என கூறியுள்ளதாகத் தெரிகிறது.
துப்பாக்கி பட வேலைகள் வரும் செப்டம்பர் 30-ம் தேதியோடு முடிகிறதாம். அதற்கு அடுத்த மாதம் விஜய் ஒரு மாதம் வெளிநாட்டில் ஓய்வெடுக்கப் போகிறாராம்!
ஏற்கெனவே பகலவன் படத்தில் விஜய் நடிப்பார் என சீமான் அறிவித்து, அந்தப் படம் அப்படியே நின்றுபோனது நினைவிருக்கலாம்!
Post a Comment