சென்னை: விஜய் நடிக்க, ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் துப்பாக்கி படத்தின் தொலைக்காட்சி உரிமையை பெரும் விலை கொடுத்து விஜய் டிவி வாங்கியுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.
பெரிய பட்ஜெட் படங்களை வாங்க, பெரும் பட்ஜெட் போட்டு களத்தில் இறங்கியுள்ளன ஜெயா டிவியும் விஜய் டிவியும். சன் டிவி இந்த விஷயத்தில் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறது.
கோச்சடையான், மாற்றான், விஸ்வரூபம் போன்ற படங்களின் ஒளிபரப்பு உரிமையை இதுவரை இல்லாத அளவு பெரிய விலைக்கு வாங்கியது ஜெயா டிவி.
தாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று களத்தில் குதித்துள்ள விஜய் டிவி, துப்பாக்கி படத்தின் உரிமையை நல்ல விலை கொடுத்து வாங்கியுள்ளதாகத் தெரிகிறது.
ஆனாலும் இது குறித்த விவரங்களை தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவும் சரி, விஜய் டிவி தரப்பும் சரி ரகசியமாகவே வைத்துள்ளது.
எப்படியும் கடைத் தெருவுக்கு வந்துதானே ஆகணும்!
Post a Comment