சினிமா தயாரிக்க போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் கடன் வாங்கிய தயாரிப்பாளர் கைது!

|

சென்னை: போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் கடன் வாங்கி சினிமா தயாரித்தவர் கைது செய்யப்பட்டார்.

கைதானவர் பெயர் முத்துரங்கன் (வயது 56). இவர் சென்னை வானகரத்தில் வசிக்கிறார்.

மருந்து கம்பெனி ஒன்றில் பங்குதாரரான இவர் மீது சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கி அடையாறு கிளை சார்பில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

போலியான ஆவணங்கள் மூலம் இந்த வங்கி கிளையில் ரூ.8.86 லட்சம் கடன் வாங்கி மோசடி செய்து விட்டதாக புகாரில் குற்றம் சுமத்தப்பட்டு இருந்தது.

இந்த புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் முத்துரங்கன், இது போல் போலி ஆவணங்கள் மூலம் நிறைய வங்கிகளில் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதன் பேரில் அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

சினிமா தயாரிக்க...

தான் வங்கி கடன் வாங்கி மோசடி எதுவும் செய்யவில்லை என்றும், கடன் வாங்கிய பணத்தில் சினிமா தயாரிப்பில் ஈடுபட்டதாகவும், படம் வெளிவராததால், கடும் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகவும், அதனால் கடன் பணத்தை திருப்பி செலுத்த முடியவில்லை என்றும் முத்துரங்கன் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

Post a Comment