மும்பை: இந்தியின் முன்னணி நடிகரான அமீர்கான், சமீபத்தில் ஒரே நேரத்தில் 22 வீடுகளை வாங்கியுள்ளார்.
மெகா படங்களில் ஹீரோ, சொந்தப் படத் தயாரிப்பு என அடுத்தடுத்த ஹிட் படங்களில் நடித்து எக்கச்சக்கமாக சம்பாதிப்பவர் அமீர்கான்.
ஒரு படத்துக்கு ரூ.100 கோடிக்கும் மேல் பல வழிகளில் அவருக்கு வருமானம் வருவதாக கூறப்படுகிறது. சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை அமீர்கான் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்கிறார்.
தற்போது 22 வீடுகளை அவர் ஒரே நேரத்தில் விலைக்கு வாங்கியுள்ளாராம்.
இந்த வீடுகள் உத்தரபிரதேச மாநிலம் சகாபாத்தில் அமைந்துள்ளன. இந்த வீடுகள் அமீர்கானின் உறவினர்களுக்கு சொந்தமானவை. வீட்டை விற்க அவர்கள் முடிவு செய்து புரோக்கர்கள் வைத்து ஆள் தேடினார்கள்.
இந்த விவரம் அமீர்கானுக்கு தெரியவந்ததும் அவரே 22 வீடுகளையும் வாங்கி, தனது சகோதரர் மற்றும் சகோதரி பெயரில் பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து அமீர்கான் கூறும்போது எனது உறவினர்களின் பாரம்பரிய வீடுகள் என்பதால் அவைகளை விற்க முடிவு செய்ததும் நானே வாங்கினேன். நியாயமாக சம்பாதித்து நியாயமாக வாங்கி முறைப்படி வரி செலுத்தி பதிவு செய்துள்ளேன், என்றார்.
அமீர்கானின் உறவினரும் மறைந்த பிரபல பட அதிபருமான நாசிர் உசேன் மற்றும் இன்னொரு உறவினர் வைத்திருந்த வீடுகள் இவை.
Post a Comment