பிரபல கிரைம் கதை எழுத்தாளர் ராஜேஸ்குமாரின் திகில் கதைகள் சின்னத்திரை சினிமாவாக இன்றுமுதல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றன.
கிரைம் கதைகளைப் படிப்பதற்கு என்று ஒரு வாசகர் வட்டம் இருக்கும். அதேபோல் திரில்லர் சீரியல்களை பார்ப்பதற்கு என்று தனி ரசிகர்கள் இருப்பார்கள். கிரைம் கதைகளை விரும்புபவர்களுக்காக சின்னத்திரையில் பிரம்மாண்டமான முறையில் ராஜேஸ்குமாரின் நாவல்கள் படமாக்கப்பட்டுள்ளன.
சனிக்கிழமை தோறும் இரவு 8.30 க்கு ஒளிபரப்பாகும் இந்த திகில் சினிமாவில் இன்றைக்கு கோகிலாவின் கொலை வழக்கு ஒளிபரப்பாகிறது. மர்மமான முறையில் இறந்துபோன கோகிலாவின் மரணத்தை சுற்றி பின்னப்பட்டுள்ள இந்த திகில் கதை, நாவலாக வந்த நேரத்தில் பரபரப்பாக விற்பனையானது. இந்த தொடரில் தேவ், ராம்கி, சுருளி மனோகர், கராத்தே கார்த்திக், பஞ்சாட்டி, நீலிமா ஆகியோர் நடித்துள்ளனர்.
திக் திக் காட்சிகள், பரபரப்பான திருப்பங்கள் நிறைந்த ராஜேஸ்குமாரின் கதையை கொஞ்சமும் விறுவிறுப்பு குறையாமல் இயக்கியுள்ளதாக இயக்குநர் பிரேம்நாத் கூறியுள்ளார்.
Post a Comment