தமிழகத்தில் ஆங்கில செய்தி சேனல்களுக்கு நிகராக தமிழ் செய்தி சேனல்கள் வராதா என பலரும் ஏங்கிக் கிடந்த நிலையில் சன் செய்தி சேனல் வெளி வந்தது ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. இதை விட்டால் வேறு செய்திச் சேனல் இல்லை என்ற நிலை இருந்தது.
ஒரு சம்பவம் நடந்தால் அது தவறு என்று ஒரு சேனலும், சரி என மற்றொரு சேனலும் ஒளிபரப்பி வந்தது. இதனால் நடுநிலை செய்திகளுக்கு பஞ்சம் ஏற்பட்டது. இந்த நிலையில் புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தி சேனலாக துவங்கப்பட்டது. வழக்கம்போல் இந்த சேனலும் ஏதாவது ஒரு கட்சிக்கு சாதகமாக இருக்கும் என்று பலரும் நினைத்தபோது, அந்த நினைப்பை மாற்றி நடுநிலையான செய்திகளை உடனுக்கு உடன் வெளியிட்டு வந்தது.
இதனால் தமிழக மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தது. நடுநிலை பிறவாமல் தனி இடம் பிடித்த புதிய தலைமுறை தொலைக்காட்சி துவங்கி நேற்றோடு ஓராண்டு நிறைவடைந்தது. இன்று இரண்டாமாண்டு தொடங்கியுள்ளது.
இதையொட்டி பல சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் இன்று ஒளிபரப்பப்படுகின்றன. ஒரு தகவல் எப்படிச் செய்தியாகிறது, செய்தியாளர்களின் அனுபவங்கள், ஓராண்டில் வந்த வரைகலைப் பதிவுகள், ஒவ்வொரு பிரிவிலும் என்னென்ன நடக்கிறது, செய்தி சேகரிக்கச் செல்லுமிடங்களில் நிகழ்ந்த குறும்பு நிகழ்வுகள் ஆகியவை ஒளிபரப்பாகின்றன.
Post a Comment