பிரஜீனும் நானும் ஒரே துறை என்பதால் கஷ்ட நஷ்டங்களை புரிந்து வாழ முடிகிறது. தனியாக வேலை பார்த்த போது இருந்ததை விட திருமணத்துக்கு பிறகுதான் நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன்.
எங்களின் திருமணத்துக்கு இரு வீட்டிலும் சம்மதம் இல்லாதபோது நாங்களே கோயிலுக்குச் சென்று திருமணம் செய்துகொண்டோம். காதலிக்கும் போது இருந்த தருணங்களை விட இப்பொழுது வாழ்க்கை அமைதியாய் போய்க்கொண்டிருக்கிறது.
திருமண வாழ்க்கை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. காதலித்தவரை திருமணம் செய்துகொண்டு வாழ்வதில் எவ்வளவு சந்தோஷம் இருக்கிறது. சந்தோஷமான வாழ்வைக் கொடுத்த காதலுக்கு நன்றி.
மலையாளத்தில் 50-க்கும் மேற்பட்ட சினிமாக்களில் நடித்துவிட்டேன். குழந்தைப் பருவத்திலிருந்தே நடித்து வருகிறேன். நாயகியாக 10 படங்களில் நடித்திருக்கிறேன். ‘கஸ்தூரி மான்' நான் நடித்ததில் பிடித்த படம்.
சினிமாவில் சாதிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இப்போது இல்லை. சினிமா எனக்கு பிடிக்காமல் போனதற்கு நிறைய காரணங்கள் உண்டு. சினிமாவில் தினந்தோறும் எதிரிகள் உருவாகக் கூடிய நிலை உண்டு. சீரியலில் அது இல்லை.
சீரியல் வாழ்க்கை நான் விரும்பி ஏற்றுக் கொண்டதுதான். என்னை பொருத்தவரைக்கும் சீரியலில் இருக்கும் சுதந்திரம் சினிமாவில் இல்லை என்றுதான் சொல்வேன் . அதே சமயம் போராளி படத்தின் கதை பிடித்திருந்தது. என்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்ததால் நடித்தேன் என்று புன்னகையோடு விடை கொடுத்தார் சான்ட்ரா.
Post a Comment