ஏக் தா டைகர் ரீமேக்கில் விஜய் - இயக்கம் ஜெயம் ராஜா?

|

Jayam Raja Remake Ek Tha Tiger With
சல்மான்கான் நடித்து இந்தியில் சமீபத்தில் வெளியாகியுள்ள ஏக் தா டைகர் படத்தின் தமிழ் ரீமேக்கில் விஜய் நடிக்கக் கூடும் எனத் தெரிகிறது.

பாலிவுட்டில் சமீபத்தில் அதிக வசூலைக் குவித்துள்ள படம் ஏக் தா டைகர். கபீர் கான் இயக்கிய இந்தப் படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்தாலும், படம் வசூலில் சாதித்துவிட்டது.

இப்போதே இந்தப் படத்தை தெலுங்கில் ரீமேக்கும் வேலையை ஆரம்பித்துவிட்டார்கள். கோலிவுட்காரர்கள் மட்டும் சும்மா இருப்பார்களா...

ரீமேக் ஸ்பெஷலிஸ்டான ஜெயம் ராஜாவை வைத்து இந்தப் படத்தை தமிழில் எடுக்க எடிட்டர் மோகன் முயற்சி மேற்கொண்டுள்ளாராம். ஹீரோவாக விஜய்யிடம் பேசிக் கொண்டிருக்கிறார்களாம்.

விஜய்யும் ராஜாவும் ஏற்கெனவே வேலாயுதம் படத்தில் இணைந்து வெற்றிக் கொடி நாட்டியவர்கள்தான். கவுதம் மேனனின் யோஹனிலிருந்து விலகியுள்ளதால், அந்த தேதிகளை ஜெயம் ராஜாவுக்கு தர விஜய் முடிவு செய்திருப்பதாகக் கூறுகிறார்கள்.
 

Post a Comment