சின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளர், சினிமா நடிகை, விளம்பர மாடல் என பன்முகம் கொண்டவர் காயத்ரி ஜெயராம். இப்பொழுது சூப்பர் குடும்பத்தில் மீண்டும் நிகழ்ச்சித் தொகுப்பாளராக களம் இறங்கியுள்ளார்.
மனதை திருடிவிட்டாய் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான காயத்ரி திருமணத்திற்கு பின்னர் நடிப்பிற்கு முழுக்குப் போட்டுவிட்டு மலேசியா சென்று செட்டில் ஆகிவிட்டார். அங்கு குழந்தைகளுக்கு நீச்சல், டைவிங் கற்றுத்தரும் டீச்சராக வேலை பார்த்து வருகிறார்.
மலேசியாவில் இருந்து குறிப்பிட்ட மாதங்கள் வரை மட்டுமே சென்னை வந்து செல்லும் காயத்ரி அந்த நேரத்தில் சின்னத்திரையில் கிடைக்கும் வேலைகளை செய்கிறார்.விஜய் டி.வி.யின் "ச்சீயர் லீடர்ஸ்' நடன நிகழ்ச்சிக்கு நடுவராக சில மாதங்கள் இருந்த காயத்ரி அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் மலேசியாவிற்கு சென்றுவிட்டார். இப்பொழுது சூப்பர் குடும்பம் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக மீண்டும் சின்னத்திரையில் காலடி வைத்துள்ளார்.
குடும்பம், வேலை என நேரம் சரியாக இருப்பதால் இனி சினிமா, சீரியல்களில் பார்ப்பது என்பது முடியாத விஷயம். அதற்காக நான் வருத்தப்படவில்லை. என் வாழ்க்கையில் சினிமா என்பதும் ஒரு இடம் அதில் நான் இருந்தேன் அவ்வளவுதான். இப்போது மாற்றங்களை ரசிக்க ஆரம்பித்து விட்டேன் என்கிறார் காயத்ரி ஜெயராம்.
Post a Comment