50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடும் நான் ஈ

|

Sudeep S Eega Completes 50 Days Run   

எஸ். எஸ். ராஜமவுலியின் இயக்கத்தில் சுதீப் நடித்த ஈகா ( நான் ஈ) திரைப்படம் 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக à®'டிக்கொண்டிருக்கிறது.

கன்னட நடிகர் கிச்சா சுதீப் தெலுங்கில் நடித்த படம் ஈகா. இது தமிழில் நான் ஈ ஆகா டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. படத்தில் ஈ தான் ஹீரோ என்றாலும் வில்லன் சுதீப் ஈயிடம் மாட்டிக்கொண்டு படும் பாடு நகைச்சுவை கலந்து சொல்லப்பட்ட விதம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது. இதனால் மிகப்பெரிய நடிகர்கள் நடித்த திரைப்படங்களைக்கூட எடுத்துவிட்டு தமிழ்நாட்டில் நான் ஈ திரைப்படங்களை திரையிட்டனர்.

இந்த திரைப்படம் ஆந்திராவிலும், தமிழிலும் 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக à®"டிக்கொண்டிருக்கிறாதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 25 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது நான் ஈ. கன்னட நடிகரான கிச்சா சுதீப் பிற்கு தெலுங்கு திரை உலகில் ரசிகர் மன்றம் அமைக்க ஆரம்பித்துவிட்டனர் தெலுங்கு ரசிகர்கள்.

 

Post a Comment