நியூயார்க்: அழகி கிம் கர்தஷியானுக்கு அவரது பின்புறம் நாளுக்கு நாள் பெரிதாகி வருகிறதாம். இதனால் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளாராம் அவர்.
உலக அளவில் கிம்முக்கு செமத்தியான ரசிகர் கூட்டம் உள்ளது. அவரது அழகுக்கு அழகு சேர்ப்பது எடுப்பான அவரது பின்புறம்தான். ஆனால் அது இப்போது எல்லை மீறி விரிவடைந்து வருவதால் பெரும் கவலையில் மூழ்கியுள்ளாராம் கிம்.
இதையடுத்து தற்போது தனது பின்புறத்தின் அகலத்தையும், உருவத்தையும் குறைத்து ஸ்மார்ட் ஆக முடிவு செய்திருக்கிறாராம். இதற்காக சில உடற் பயிற்சி முறைகளை அவர் கடைப்பிடிக்க ஆரம்பித்திருக்கிறாராம்.
தினசரி காலை சீக்கிரமே எழுந்து ஜிம்முக்கு ஓடுகிறார் கிம். அங்கு கடுமையாக உடற்பயிற்சி செய்கிறார். பின்புறத்தைக் குறி வைத்து அவருக்காக சிறப்பு பயிற்சி தருகிறார்களாம் ஜி்ம்மில்.
தனது எடுப்பான பின்புறத்தின் படத்தை டிவிட்டரில் போட்டுள்ள கிம், ஜீன்ஸில் எனது பின்புறம் மிகப் பெரிதாக தெரிவதைப் பாருங்கள். இதுகுறித்து உங்களது கருத்துக்களை அனுப்புங்களேன் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே, தன்னைப் போன்ற எடுப்பான பின்புறம் மற்றும் வளைவுகளுடன் கூடிய பெண்களுக்காகவே புதிய ஆடைகளை வடிவமைத்து அதை மார்க்கெட்டிலும் இறக்கியுள்ளார் கிம் தனது சகோதரியுடன் சேர்ந்து. அந்த ஆடைகளுக்கு கிம் கர்தஷியான் கர்வ்ஸ் என்றே பெயரிட்டுள்ளார் கிம்.
கிம்முக்குத்தான் அவரது பின்புறம் குறித்துக் கவலையாக உள்ளதாம். ஆனால் அவரது காதலர் கென்யே வெஸ்டுக்கு கிம்மின் பின்புறம் ரொம்பப் பிடிக்குமாம்.
'ஜிம்'முக்குப் போய் மறுபடியும் 'கும்' ஆகும் வழியைப் பாருங்க 'கிம்'...!
Post a Comment