காஞ்சனாவை ‘3டி’ யில் வெளியிடும் லாரன்ஸ்

|

Kanchana Re Release 3d   

காஞ்சனா திரைப்படத்தை 3 டி யில் மாற்றி வெளியிட ராகவா லாரன்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்த படம் காஞ்சனா. தமிழில் வெளியான இந்த திரைப்படம் தெலுங்கிலும் வெற்றி பெற்றது. தற்போது இந்த படத்தை 3 டி யாக மாற்றி மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷ் இதற்கு ஒப்புதல் அளித்துவிட்டதாக கூறப்படுகிறது.

ராகவா லாரன்ஸ் இயக்கியுள்ள ரிபல் தெலுங்குத் திரைப்படம் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகியுள்ளது. இதனையடுத்து காஞ்சனா திரைப்படத்தினை 3 டி யாக மாற்றும் வேலைகள் நடைபெறும் என்று கூறப்படுகிறது. 6 மாதகாலம் வரை ஆகும் என்பதால் புதிதாக ஏதாவது சில காட்சிகளை சேர்க்கலாமா என்று லாரன்ஸ் யோசித்து வருகிறார்.

லாரன்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. தலைவர் படம் சிவாஜி 3 டியில் வெளியாக உள்ளது. அதே பாணியில் தனது படமான காஞ்சனாவை 3 டியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசிக்கொள்கின்றனர்.

 

Post a Comment