7சி வகுப்புக்கு வந்த சமுத்திரகனி

|

Sattai Team Meet 7c Students

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ‘7 சி' சீரியல் பள்ளி மாணவர்களை மையமாகக் கொண்டது. 7 சி யின் வகுப்பு ஆசிரியர் ஸ்டாலின் அனைத்து மாணவர்களுக்கும் பிடித்தமானவர். ஒரு ஆசிரியர் எப்படி இருக்கவேண்டும் என்று உதாரணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

சாட்டை திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவும் ஆசிரியர் - மாணவர்களைப் பற்றிய கதைதான். அதில் அரசுப் பள்ளி ஆசிரியராக வரும் தயாளன் மாணவர்களின் நலனுக்காகவும், பள்ளியின் நலனுக்காகவுமே தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்.

சாட்டையில் தயாளனாக நடித்துள்ள சமுத்திரகனி, இயக்குநர் எம். அன்பழகன், தயாரிப்பாளர் பிரபுசாலமன் ஆகியோர் 7சி வகுப்பு மாணவர்களை நேரில் சந்தித்து உரையாடினார்கள். ஆசிரியராக நடித்த சமுத்திரகனியிடம் 7சி வகுப்பு மாணவர்கள் சராமாரியாக கேள்விகளை கேட்டனர்.

சாட்டைப் படத்தின் வசனத்தை அதே வேகத்தோடும் உணர்ச்சியோடும் பேசி மாணவர்களிடம் கைத்தட்டல் பெற்றார் சமுத்திரக்கனி. இறுதியாக பள்ளி மாணவர்கள் அனைவரும் சமுத்திரகனி, பிரபுசாலமன், அன்பழகன் ஆகியோருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அன்றைய தினம் மகிழ்ச்சியாக கழிந்தது 7சி மாணவர்களுக்கு.

 

Post a Comment