85 ஆண்களுக்கு மத்தியில் ஒரே பெண்ணாய் அனுஷ்கா அசராமல் பணியாற்றினார் - ஆர்யா

|

Arya Praises Anushka S Braveness   

இரண்டாம் உலகம் படப்பிடிப்புக்காக 85 ஆண்களுக்கு மத்தியில் ஒரே பெண்ணாய் நின்று அசராமல் பணியாற்றினாராம் நடிகை அனுஷ்கா.

செல்வராகவன் இயக்கும் ‘இரண்டாம் உலகம்' படத்தில் ஆர்யாவின் ஜோடியாக நடிக்கிறார் அனுஷ்கா.

இந்தப் படத்தின் முக்கிய காட்சிகள் ஜார்ஜியாவில் படமாக்கப்பட்டன.

இந்தச அனுபவம் குறித்து நடிகர் ஆர்யா கூறுகையில், "செல்வராகவன் என் அபிமான இயக்குநர். அவர் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம் எனது கனவுப் படம் என்றால் மிகையல்ல.

என்னை சந்தித்த முதல் நாளிலேயே கதையை சொல்லிவிட்டார் செல்வா சார். கதை மிகவும் பிடித்தது. ஆக்ஷன், காமெடி, சென்டிமென்ட் அனைத்துமே இந்தப் படத்தில் உண்டு. ஜார்ஜியாவின் காடுகளில் படப்பிடிப்பு நடந்தபோது மிகவும் கஷ்டப்பட்டோம்.

நல்ல ரூம், மின்சார வசதி, தூங்குவதற்கு கட்டில் என எந்த வசதியும் இல்லை. அனுஷ்கா ரொம்ப சிரமப்பட்டார். 85 ஆண்கள் மத்தியில் அவர் மட்டுமே பெண். எதுபற்றியும் குறை சொல்லவில்லை. கடுமையான உழைப்பாளியாக அனைவரையும் அசர வைத்தார்," என்றார்.

ரொமான்டிக் படம் என்பதால், ஏகப்பட்ட நெருக்கமான காட்சிகள் உள்ளனவாம் இருவருக்கும். அது சரி... ஏ வாங்காமல் தப்பிக்குமா?!

 

Post a Comment