பின்னணிப் பாடகர் மனோவும், பாடகி சித்ராவும் பாடிய பாடல்களை கேட்க, கேட்க திகட்டாத இன்பமாக இருக்கும். அதுவும் இளையராஜாவின் இசையில் இந்த ஜோடி பாடிய பாடல்கள் அனைத்தும் எவர்கிரீன் ரகம்.
நாயகன் படத்தில் இந்த ஜோடி பாடிய நீயொரு காதல் சங்கீதம்... பாடல் நாள் முழுவதும் கேட்டுக் கொண்டிருக்கலாம். 25 வருடத்திற்கு முன்பு பாடப்பட்ட அந்த பாடலை இப்பொழுது மனோவும் சித்ராவும் பாடினால் எப்படி இருக்கும்? அந்த அதிசயம் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 3 நிகழ்ச்சியில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக இருக்கும் மனோவும், சித்ராவும் ரசிகர்களை மகிழ்விக்க நீயொரு காதல் சங்கீதம்... பாடலை பாடினார். அதே ரொமான்ஸ் உடன் பாடி ரசிகர்களின் செவிகளுக்கு இசை விருந்து படைத்தனர்.
மழலைகள் பாடினால் அவர்களை மகிழ்விக்க சாக்லேட் மழை பொழிவதைப்போல மனோ, சித்ராவை மகிழ்விக்க சாக்லேட் மழை பொழிய வேண்டும் என்று கட்டளையிட்டார் மற்றொரு நடுவர் மால்குடி சுபா. உடனே குஷியாகி விட்டனர் மனோவும், சித்ராவும்.
சாக்லேட் மழையின் நனைந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். செவிக்கினிய பாடலை கேட்ட மகிழ்ச்சியோடு இருந்த நேரத்தில் மிதமான உறக்கம் கண்களை தழுவியது.
Post a Comment