அட்டகத்தி படத்தைத் தயாரித்த சிவி குமாரின் அடுத்த படம் பீட்சாவின் இசையை வெளியிட்டனர் இயக்குநர்கள் பிரபு சாலமன் மற்றும் சீனு ராமசாமி.
தென்மேற்குப் பருவக்காற்று பட நாயகன் விஜய் சேதுபதி நாயகனாகவும், ரம்யா நம்பீசன் நாயகியாகவும் நடிக்கின்றனர்.
வியாழக்கிழமை நடந்த இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குநர் சீனுராமசாமி, படத்தின் தொழில்நுட்ப நேர்த்தியை வெகுவாகப் புகழ்ந்தார்.
தன்னைப் போன்ற புதிய இயக்குநர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புத் தரும் தயாரிப்பாளர் குமாரைப் பாராட்டினார் இயக்குநர் சுப்புராஜ்.
பாடகர் கானா பாலாவின் நகைச்சுவைப் பேச்சு, விழாவின் ஹைலைட்டாக அமைந்தது.
இசையை பிரபு சாலமனும் சீனு ராமசாமியும் இணைந்து வெளியிட்டனர். தயாரிப்பாளர்கள் டி சிவா, பி எல் தேனப்பன், இயக்குநர்கள் பா ரஞ்சித், செந்தில் மோகன், கவிஞர் மதன் கார்க்கி, அட்டகத்தி தினேஷ் ஆகியோரும் நிழ்ச்சியில் பங்கேற்றனர்.