சென்னை: நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் தனது முதல் படமான கடல் இயக்குனர் மணிரத்னத்தை தனது நடிப்பால் இம்பிரஸ் செய்துவிட்டாராம்.
நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம், ராதாவின் இளைய மகள் துளசியை வைத்து மணிரத்னம் இயக்கும் படம் கடல். மீனவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்படுகிறது. இந்த படத்தில் முதலில் சமந்தா தான் கதாநாயகியாக நடித்தார். பின்னர் அவருக்கு பதில் துளசி வந்தார். துளசி இந்த கதைக்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டதைப் பார்த்து மணி அசந்துவிட்டாராம்.
இந்நிலையில் கௌதமி்ற்கு இது தான் முதல் படம் என்றாலும் அவர் நடிப்பில் பின்னி பெடலெடுத்துள்ளாராம். அவரது நடிப்பைப் பார்த்து மணி பெருமைப்பட்டுள்ளார். நவரச நாயகனின் மகனாச்சே நடிப்பதற்கு சொல்லியா கொடுக்க வேண்டும்.
அது மட்டமின்றி ஒரு நடிகரிடம் இருந்து சிறந்த நடிப்பை வெளிக்கொண்டு வருவதில் வல்லவரான மணிரத்னத்தின் படத்தில் அல்லவா கௌதம் நடிக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான அஞ்சலி படத்தில் ஷாமிலியின் நடிப்பைப் பார்த்தவர்கள் இந்த குழந்தையை மணி எப்படி நடிக்க வைத்தார் என்று இன்றும் வியக்கின்றனர்.
Post a Comment