சதைப்பிடிப்பான பெண்களைத்தான் ஆண்களுக்குப் பிடிக்கும்... வித்யா பாலன்

|

Voluptous Is Beautiful Ask Men Vidya Balan   

மும்பை: சற்றே சதைப்பிடிப்பான, இயல்பான வளைவு நெளிவுகளுடன் கூடிய பெண்கள்தான் அழகு. ஆண்களைக் கேட்டுப் பாருங்கள், அவர்கள் அதைத்தான் சொல்வார்கள் என்று கூறியுள்ளார் நடிகை வித்யா பாலன்.

இதுகுறித்து வித்யா கூறுகையில், பெண்களைப் பொறுத்தவரை ஒல்லிக்குச்சியாக இருந்தால் அழகு கிடையாது. சற்றே சதைப்பிடிப்புடன் இருக்க வேண்டும். இயல்பான வளைவு நெளிவுகள் இருக்க வேண்டும். அதுதான் அழகு. ஆண்களைக் கேட்டுப் பாருங்கள், உங்களுக்கே தெரியும்.

இந்தியப் பெண்களுக்கு மட்டுமே இயல்பான வளைவு நெளிவுகள் அழகாக அமைந்துள்ளன. அவர்களின் உடல்அமைப்பே கவர்ச்சிகரமானதுதான். என்னைப் பொறுத்தவரை எனது உடல் அழகு மீது எனக்கு அபார நம்பிக்கை உண்டு, பெருமை உண்டு. என்னை நானே ரசித்துக் கொள்வேன், அதில் தவறேதும் இல்லை.

டர்ட்டி பிக்சர்ஸ் படத்துக்காக நான் சற்றே சதை போட்டேன். தற்போது அது குறைந்து விட்டது. இதற்காக நான் அதிகம் மெனக்கெடவில்லை. எனது சதைப் பிடிப்பு சற்று குறைந்திருந்தாலும், அது வெளியில் தெரியாத வகையில்தான் எனது உடல் வாகு அமைந்துள்ளது. டர்ட்டி பிக்சர்ஸ் முடிந்தவுடனேயே எனது உடல் எடை குறைய ஆரம்பித்து விட்டது.

எனக்கு பனாரசி சேலைகள் என்றால் உயிர். எங்காவது போவதாக இருந்தால் அந்த சேலையைத்தான் நான் உடுத்திக் கொள்வேன். சேலைதான் பெண்களுக்கு கூடுதல் அழகு தெரியுமா என்று அழகாக சிரித்தபடி கூறுகிறார் வித்யா பாலன்.

சரி கல்யாணம் எப்போ என்று கேட்டால். அதுகுறித்து நான் சிந்திக்கவே இல்லையே. அவசரமும் இல்லை. அவசரம் காட்டவும் நான் விரும்பவில்லை. நடக்கும்போது எல்லோருக்கும் தெரிவித்து விட்டுத்தான் செய்வேன், போதுமா என்று கூறி விடை பெற்றார் வித்யா.

 

Post a Comment