சமையலறை மட்டுமே மகளிரின் உலகம் என்பதையும் தாண்டி இன்றைக்கு பல துறைகளிலும் பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர். மகளிரின் சாதனையை உலகறியச்செய்ய வேண்டும் என்பதற்காக தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. அந்த வகையில்
மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் `மகளிர் மட்டும்' நிகழ்ச்சி பெண்களுக்காக, சிறப்பு வாய்ந்த பகுதிகளால் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் ‘அவளும் தமிழும்', புதுமைப் பெண்', `தெரியுமா', `நீ ஒரு வழிகாட்டி' என நான்கு பகுதிகளை கொண்டுள்ளது.
முதல் பகுதியான அவரும் தமிழும் அனைவருக்கும் எளிய தமிழினை கற்றுக் கொடுக்கும் வண்ணம் அமைந்துள்ளது. விளையாட்டு, கலந்துரையாடல் என வாரந்தோறும் மாறி வந்தாலும் தமிழில் பேசுவதை மட்டும் கருவாக கொண்டுள்ள நிகழ்ச்சி, `அவளும் தமிழும்.'
`புதுமைப் பெண்' பகுதியில் பல்துறையில் சாதனை படைத்த பெண்களை அறிமுகம் செய்கின்றனர். இதில் சாதனை படைத்த பெண்கள் கடந்து வந்த பாதையை அறிந்து, மற்றவர்களும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் அமைக்கப்பட்டது.
அடுத்து `தெரியுமா?' நிகழ்ச்சியில் உலகிற்கு அறிமுகமாகி பல நாட்கள் கடந்தும் நமக்கு தெரிய வராத பல தகவல் குறித்த ஓர் அரிய தொகுப்பு இடம் பிடிக்கிறது.
இறுதியாக `நீ ஒரு வழிகாட்டி' பகுதியில் வேலைக்கு போகாத பெண்கள் வீட்டிலேயே முடங்கிப் போகாமல், அவர்களும் தங்களது ஓய்வு நேரத்தினை பயனுள்ளதாக்கும் வகையில் எளிதான கைத்தொழில் கற்றுத்தரப்படுகிறது. இதன் மூலம் சுயமாக பணம் ஈட்டும் முறையினை பெண்கள் தெரிந்து கொள்வர்.
ஞாயிறு தோறும் பிற்பகல் 3.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மகளிர் மட்டும் நிகழ்ச்சியை பிரியா தொகுத்து வழங்குகிறார்.
Post a Comment