ரீமா சென் 5 மாத கர்ப்பமாக இருக்கிறார். இதையடுத்து நடிப்பில் இருந்து ஓய்வு பெற உள்ளார். 'தூள்', 'ஆயிரத்தில் ஒருவன்' உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகை ரீமா சென். கடந்த மார்ச் மாதம் இவருக்கும் டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர் ஷிவ் கரணுக்கும் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த பிறகு மீண்டும் நடிக்க வந்தார் ரீமா. தற்போது பெண் இயக்குனர் சினேகா இயக்கும் 'சட்டம் ஒரு இருட்டறை' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் இந்தியில் 'கேங்ஸ் ஆப் வசேப்பூர்' என்ற படத்திலும் நடித்திருந்தார். இதில் அவர் படுகவர்ச்சியாக நடித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
ரீமா சென் தற்போது 5 மாத கர்ப்பமாக இருக்கிறார். அதை வெளிப்படுத்தும் அளவுக்கு வயிறும் தெரிகிறது. எனவே ஷூட்டிங் செல்வதை குறைத்துக் கொண்டிருக்கும் அவர் 'சட்டம் ஒரு இருட்டறை'யில் நடிக்க வேண்டிய காட்சிகளை முடித்துக்கொடுத்துவிட்டு நடிப்பில் இருந்து ஒதுங்கி வீட்டில் ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளார். சமீபத்தில் மருத்துவமனைக்கு சென்று ரீமா சென் பரிசோதனை செய்ததில் வரும் மார்ச் மாதம் 2வது வாரத்தில் குழந்தை பிறக்கும் என டாக்டர்கள் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து புதிய படங்களில் நடிப்பதை நிறுத்தி வைத்திருக்கிறார். குழந்தை பிறந்த பிறகு மீண்டும் நடிக்க திட்டமிட்டுள்ளாராம்.

Post a Comment