ஜேம்ஸ் பாண்ட் படங்கள் என்றாலே சுவாரஸ்யமான விசயங்களுக்கு பஞ்சமிருக்காது. ஆடைகுறைந்த தேவதைகளும், முத்தக்காட்சிகளும் ஜேம்ஸ்பாண்ட் படங்களில் குறைவில்லாது இருக்கும். விரைவில் வெளியாக உள்ள ஸ்கைபால் படத்தில் இதுவரை இருந்ததை விட சூப்பர்காட்சிகள் அதிகம் இடம் பெற்றிருக்கிறதாம். இதை சொன்னது வேறு யாருமல்ல படத்தில் நடித்த டேனியல்க்ரேக்தான்.
ஜேம்ஸ்பாண்ட் படங்களால் நஷ்டம் என்று சில சமயம் பேச்சு எழுந்ததுண்டு. ஆனால் இனி அப்படி இருக்காது. கடந்த சில மாதங்களாகவே ஜேம்ஸ்பாண்ட் பற்றிய பேச்சுதான் மீடியாக்களில் உலாவருகிறது. ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரம் தோன்றி 50 ஆண்டுகள் ஆவதால் இப்போது எங்குப் பார்த்தாலும் பாண்ட்... ஜேம்ஸ்பாண்ட்தான். இதனால் ஸ்கைஃபால் படத்திற்கு சூப்பர் விளம்பரம்தான்.
‘ஸ்கைஃபால்' படத்தின் பிரிமியர் காட்சி கடந்த அக்டோபர் 23ம் தேதி வெளியிடப்பட்டது. இதனைக் காண இதற்கு முன் ஜேம்ஸ்பாண்ட் படத்தில் நடித்த அனைத்து நடிகர்கள், நடிகையர்கள் வந்திருந்தனர். அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
‘ஸ்கைஃபால்' திரைப்படம் பற்றி ஜேம்ஸ்பாண்டாக நடித்திருக்கும் டேனியல் க்ரேக்கிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த டேனியல், பாண்ட் படங்களிலேயே ஸ்கைஃபால் கிளாஸ் படமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். படத்தில் நடித்திருக்கிறார், இப்படிதான் பேசுவார் என்று சாதாரணமாக விடமுடியாது. காரணம் ஸ்கைஃபாலை இயக்கியிருப்பது சேம் மென்டிஸ்.
சேம் மென்டிஸ் இயக்கிய முதல் படமான ‘அமெரிக்கன் பியூட்டி' ஐந்து ஆஸ்கர் விருதுகளை வாங்கியது. அடுத்து ‘ரோடு டூ பெர்டிஷன்', ஜார் கெட்.. என அவர் இயக்கிய அனைத்து படங்களுமே சூப்பர்ஹிட். இதேபோல் ‘ஸ்கைஃபால்' படத்தையும் வழக்கமான பாண்ட் படங்களைப் போல் இல்லாமல் ஸ்டைலிஷாகவும், அதேநேரம் ஆக்சன் அளவுக்கு பாண்டின் கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்தும் எடுத்திருக்கிறாராம்.
ஸ்கைபால் திரைப்படம் நவ.2 இந்தியாவில் வெளியாகிறது. அதேசமயம் அமெரிக்காவில் நவம்பர் 9ஆம் தேதிதான் வெளியாகிறது. ஜேம்ஸ் பாண்ட் படத்திற்கு ஆஸ்கர் கிடைக்குமா? அல்லது தரையில் வீழுமா என்று இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும் என்கின்றனர் திரைவிமர்ச்சகர்கள்.
Post a Comment