மும்பை: தி சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ் படத்தில் புதிதாக பூஜா மிஸ்ராவும் இணைந்துள்ளார். இவர் பிக் பாஸ் 5 ரியாலிட்டி ஷோவில் சூட்டைக் கிளப்பியவர். இப்போது தி சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ் படத்திலும் பட்டையைக் கிளப்ப கிளம்பியுள்ளார்.
சதீஷ் ரெட்டி தயாரிப்பில், ஹரூன் ரஷீ்த் இயக்கத்தில் உருவாகும் படம்தான் இந்த சிட்டி.இந்தப் படத்தில் ஏற்கனவே வீணா மாலிக் படு ஹாட்டாக நடிக்கவிருக்கிறார். இந்த நிலையில் புதிதாக பூஜா மிஸ்ராவையும் சேர்த்துள்ளனர். இருவருமே பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் கலக்கியவர்கள்தான் என்பதால் இந்தப் படத்திற்கு ஹீட் மேலும் கூடியுள்ளது.
பஜா மிஸ்ரா இந்தித் திரையுலகுக்குப் புதியவர் இல்லை. ஏற்கனவே 2006ம் ஆண்டு வெளியான மேரா தில் லெகே தேக்கோ படத்தில் ஒரு குத்துப் பாட்டுக்கு ஆடியவர்தான்.
இந்த நிலையில் தற்போது வீணாவுடன் இணைந்து தி சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ் படத்தில் கலக்கப் போகிறார்.
பிக் பாஸ் 5 ரியாலிட்டி ஷோவில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியவர்தான் பூஜா. ஒரு கட்டத்தில் ஏகப்பட்ட சர்ச்சையாகி வீட்டை விட்டும் வெளியேற்றப்பட்டவர்.
சிட்டி படத்தில் நடிப்பது குறித்து பூஜா கூறுகையில், என்னால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நிறைய டிஆர்பி ரேட்டிங் கிடைத்தது. இப்போது தி சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ் படத்துக்கும் என்னால் கிராக்கி கூடப் போகிறது. எனவே இந்தப் படத்தின் பிக் பாஸ் நான்தான் என்று மார் தட்டிக் கூறுகிறார்.
இவரை எப்படி வீணா சமாளிக்கப் போகிறாரோ...!
Post a Comment