பாடல் மட்டுமல்லாது ஆடலுடன் கூடிய வித்தியாசமான டி20 இசைப் போட்டியினை விஜய் டிவி ஒளிபரப்பி வருகிறது. 6 அணிகள் 42 பாடகர்கள் பங்கேற்றுள்ள இந்த இசைப் போட்டி தினசரி இரவு இசை ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
சூப்பர்சிங்கர், சூப்பர் சிங்கர் ஜூனியர் போட்டிகளை நடத்தி வந்த விஜய் டிவி தற்போது புதிதாக குழு வடிவிலான இசைப்போட்டியை தொடங்கியுள்ளது. டி 20 கிரிக்கெட் போல இந்த இசைப் போட்டிக்கு சூப்பர் சிங்கர் டி 20 என பெயரிட்டுள்ளனர்.
6 அணியினர் 42 பாடகர்கள் என களை கட்டியுள்ளது சூப்பர் சிங்கர் டி 20. வெள்ளை, பச்சை, நீலம், சிவப்பு, கருப்பு மஞ்சள் என ஆறு அணியாக பிரிக்கப்பட்டு சூப்பர் சிங்கரில் பங்கேற்ற பாடகர்கள் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீனி வெள்ளை அணிக்கும் பூஜா பச்சை அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சாய் சரண் மஞ்சள் அணிக்கும் சந்தோஷ் சிகப்பு நிற அணிக்கும் கேப்டனாக உள்ளனர். நிகில் மாத்யூ கருப்பு அணிக்கும் சத்யா நீலம் அணிக்கும் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இப்போது லீக் போட்டிகள் தொடங்கியுள்ளன. டி 20 நடுவர்களாக பாடகர் மனோ, பாடகி ஸ்வேதா, மற்றும் ஆனந்த் வைத்தியநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களாக திவ்யதர்சினி, மா.ப.க. ஆனந்த் ஆகியோர் தங்களின் கலகலப்பான பேச்சினால் நிகழ்ச்சிக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்து வருகின்றனர். தினசரி இரவு 9 மணிமுதல் 10 மணிவரை இசை ரசிகர்கள் சூப்பர் சிங்கர் டி20 நிகழ்ச்சியை கண்டு ரசிக்கலாம்.
Post a Comment