30ஆம் தேதி நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ரிலீஸ்

|

Coming 30th Natuvula konjam pakkatha kanom ஒரு மாதத்துக்கு முன்பு பத்தி‌ரிகையாளர்களுக்கு நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரையிடப்பட்டது. அறிமுக இயக்குன‌ரின் படம், விடலைத்தனமான பெயர், போரடிக்காமல் இருந்தால் ச‌ரிதான் என்று படம் பார்க்க உட்கார்ந்தவர்களை புரட்டிப் போட்டது படம். படத்தை சின்னதாக ட்‌ரிம் செய்து வெளியிட்டால் பிய்ச்சுக்கும் என்று தயா‌ரிப்பாளர் சதீஷ்குமா‌ரின் கையை வலிக்க வலிக்க குலுக்கியதில் மனிதர் உஷாராகி படத்தின் ‌ரிலீஸை தள்ளி வைத்தார்.

ஏன்?

ஐம்பது தியேட்ட‌ரில் படத்தை வெளியிடும் ஐடியாவில் இருந்தாராம். பத்தி‌ரிகையாளர்களின் பாராட்டைப் பார்த்தவர் 150 தியேட்டர்களாக ஐடியாவை நீட்டித்தார். அதற்காகதான் இந்த கால இடைவெளி.

வரும் 30ஆம் தேதி படத்தை வெளியிடுகிறார். பிரஸ்ஸின் அறிவுரைப்படி 25 நிமிடங்கள் படத்தில் ட்‌ரிம் செய்யப்பட்டிருக்கிறது. முக்கியமான விஷயம் இந்த வித்தியாசமான படம் ஒளிப்பதிவாளர் ஒருவ‌ரின் உண்மைக்கதை.

பிக்சனைவிட உண்மைதான் பல நேரம் சுவாரஸியமாக இருக்கிறது.
 

Post a Comment