பிரபுதேவா நடனப்போட்டியில் 40 லட்சம் வீடு வெல்லப்போவது யார்?

|

Vijay Tv Dance Programe Ungalil Yar Adutha Prabudeva

விஜய் டிவியின் நடன நிகழ்ச்சியான ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா?' சீசன் 2 நடனநிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சிறந்த நடனக்கலைஞராக தேர்வு பெற்று 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டினை பரிசாக வெல்லப்போவது யார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

200 போட்டியாளர்கள்... ஆக்ரோசமான நடனம்... என à®'வ்வொரு வாரமும் ஞாயிறு அன்று மாலை நேரத்தில் விஜய் டிவியில் ரசிகர்களை மகிழ்வித்த போட்டியளர்கள் இன்று இறுதிப் போட்டியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

உங்களில் யார் அடுத்த பிரபுதேவா? சீசன் 1 வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் சீசன் 2 நடன நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதற்காக சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய நகரங்களைச் சேர்ந்த 200 சிறந்த நடன போட்டியாளர்களை தேர்ந்தெடுத்தனர் நடுவர்கள்.

à®'வ்வொரு வாரமும் à®'வ்வொரு விதமான போட்டிகள். பல கட்டங்கள் என நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் நடனப்போட்டியின் நாயகன் பிரபுதேவாவும் அவ்வப்போது தோன்றி போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினார்.

நடன இயக்குநர்கள் ஸ்ரீதர், காயத்ரி ரகுராம் நடிகை சங்கீதா ஆகியோர் போட்டியின் நடுவர்களாக பங்கேற்று சிறந்த நடனக்கலைஞர்களை தேர்வு செய்தனர். இறுதிச்சுற்றில் நடனமாட கார்த்திக், விஜய் மற்றும் ஜாபர் ஆகியோர் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

நான்காவது போட்டியாளரை தேர்வு செய்வதற்கான வைல்டுகார்டு சுற்று நேற்று நடைபெற்றது. 10 போட்டியாளர்கள் இந்த சுற்றில் நடனமாடினர். à®'வ்வொரு போட்டியாளரும் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற நெருக்கடியில் தங்களின் சிறந்த பங்களிப்பை செய்தனர் என்றே கூறவேண்டும். நடுவர்களுக்குத்தான் யாரை தேர்ந்தெடுப்பது என்று குழப்பம் ஏற்பட்டுவிட்டது. இதனால் நான்காவது போட்டியாளர் யார் என்பதை அறிய à®'ருவாரம் வரை காத்திருக்க வேண்டும்.

இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி வரும் 11ம் தேதி கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் நடன இயக்குநர்கள் ஸ்ரீதர், அசோக்ராஜா, காயத்ரி ரகுராம், நடிகர் பரத், நடிகை சங்கீதா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இரண்டு சுற்று நடனப் போட்டியில் இறுதிப்போட்டியாளர்கள் தங்களின் திறமையை நிரூபிக்க வேண்டும். இவர்களில் சிறப்பாக நடனமாடிய à®'ருவரை வெற்றியாளராக நடிகரும், நடனஇயக்குநருமான பிரபுதேவா அறிவிப்பார். அவருக்கு 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்படுகிறது.

 

Post a Comment