கோச்சடையான்: கே.எஸ்.ரவிக்குமார்க்கு பதில் மாதேஷ்

|

In Kochchataiyan Movie: KS.Ravikumar Changed by Madhesh சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடிக்கும் 'கோச்சடையான்' படத்தின் இயக்குநர் மேற்பார்வை பொறுப்பிலிருந்து மூத்த இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் திடீரென நீக்கப்பட்டுள்ளார். அவர் நீக்கப்பட்டாரா, விலகிவிட்டாரா என்பது தயாரிப்பாளர் தரப்பில் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.

அவருக்கு பதில் மாதேஷ் அந்தப் பொறுப்புக்கு வந்துள்ளார். ரஜினி ரசிகர்களுக்கு இந்த மாற்றம் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

படப்பிடிப்புகள் முடிவடைந்து இறுதிகட்ட வேலைகள் நடைபெற்று வருவதாகக் கூறப்பட்ட நிலையில், இயக்குநர் மாற்றம் ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

வரலாற்று கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார். இப்படம் முழுக்க முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்குனர் மேற்பார்வையை கே.எஸ்.ரவிக்குமார் கவனித்துக் கொண்டிருந்தார். தற்போது அந்த பொறுப்பு இயக்குனர் மாதேஷிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இயக்குனர் மாதேஷ் 'மதுர', 'சாக்லேட்', 'மிரட்டல்' ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் ஷங்கருடன் இணைந்து முதல்வன் படத்தைத் தயாரித்தவர். அந்தப் படத்தின் இணை இயக்குநராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Post a Comment