சென்னை: ஆர்யாவுடன் லிப் டூ லிப் முத்தக் காட்சியில் ரொம்ப ரொம்ப தயங்கி கடைசியில் ஒரு வழியாக முத்தமிட்டு நடித்துக் கொடுத்துள்ளாராம் அஞ்சலி. ஆனால் 6 டேக் போய் விட்டதாம், முத்தத்தை முழுசாக படம் பிடிக்க...
சேட்டை என்ற பெயரில் ஆர்யா, அஞ்சலி நடித்து வரும் புதுப் படத்தை கண்ணன் இயக்குகிறார்.இது இந்தியில் வெளியான டெல்லி பெல்லி படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். டெல்லி பெல்லியில் ஆழமான முத்தக் காட்சி மற்றும் படுக்கை அறைக்காட்சி இருந்தது. ஆனால் அதே போல தமிழில் வைக்கலாம் என்றால் நாயகி அஞ்சலி ரொம்பவே தயங்கினாராம். இதனால் முத்தக் காட்சியை மட்டும் எப்படியாவது எடுத்து விடலாம் என்ற முடிவுக்கு வந்தனர் கண்ணனும், நாயகன் ஆர்யாவும்.
சமீ்பத்தில் இந்தக் காட்சியைப் படமாக்கினர். ஆனால் அஞ்சலி கடைசி நேரத்தில் மறுத்து விட்டாராம். இதனால் ஷாக் ஆகிப் போன கண்ணனும், ஆர்யாவும், அஞ்சலிக்குப் பக்கத்தில் உட்கார்ந்து ரொம்ப நேரம் இந்த் காட்சி பற்றி விளக்கினார்களாம். ரொம்ப நேர சமாதானப் பேச்சுக்குப் பின்னர் உதட்டைக் கொடுக்க முன் வந்தாராம் அஞ்சலி.
அதன்பின்னர் முத்தக் காட்சியைப் படமாக்கினராம். ஆனால் 6 டேக் வரை ஆகி விட்டதாம், முத்தத்தை முழுமையாக படம் பிடிக்க. ஆனால் காட்சி படு பக்காவாக வந்திருப்பதாக முத்தமிட்டதை கூட இருந்து பார்த்த யூனிட்காரர்கள் சூடாகப் பேசிக் கொள்கிறார்கள்.