டாப்ஸிக்கு பாவாடை, தாவணி நச்சுன்னு இருக்கு: சொல்கிறார் ஆதி

|

Aadhi Praises Tapsee   

சென்னை: மறந்தேன் மன்னித்தேன் படத்தில் வரும் நெருக்கமான காட்சிகளில் டாப்ஸி நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார் என்று நாயகன் ஆதி தெரிவித்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகும் படம் மறந்தேன் மன்னித்தேன். ஆதி நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு லக்ஷ்மி மஞ்சு, டாப்ஸி என்று 2 ஜோடி. இந்த படத்தை லக்ஷ்மி மஞ்சு தயாரித்துள்ளார். படத்தில் ஆதியும், டாப்ஸியும் நெருக்கமாக வரும் ராத்திரி நேரத்து என்ற பாடல் காட்சியில் இருவரின் கெமிஸ்ட்ரி நல்லாவே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறதாம்.

இது குறித்து நாயகன் ஆதி கூறுகையில்,

ராத்திரி நேரத்து பாடல் காட்சியில் நானும் டாப்ஸியும் நெருக்கமாக நடித்துள்ளோம். படுக்கையறையில் போர்வைக்குள் என்று நெருக்கமாகவே நடித்துள்ளோம். இது போன்ற காட்சிகளில் நடிக்க உடன் நடிக்கும் நடிகை நல்ல ஒத்துழைப்பு கொடுத்தால் தான் காட்சி நன்றாக வரும். அப்படி பார்க்கையில் டாப்ஸி நல்ல ஒத்துழைப்பு தந்தார். பாவாடை, தாவணியில் சும்மா நச்சுன்னு இருந்தார் என்றார்.

 

Post a Comment