சென்னை: கமல்ஹாசன் தனது 58வது பிறந்தநாளையொட்டி தனது வீட்டில் திரையுலக நண்பர்களுக்கு விருந்து கொடுத்தார். இதில் ரஜினிகாந்த், மம்முட்டி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நடிகர் விஜய் விருந்துக்கு முன்பாகவே தனியாக வந்து கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து தெரிவித்துச் சென்றார்.
நவம்பர் 7ம் தேதி கமல்ஹாசனின் பிறந்தநாளாகும். இந்த ஆண்டு 57 வயதை முடித்து 58வது வயதை தொடங்கியுள்ளார் கமல்ஹாசன். அன்று காலை விஸ்வரூபம் படத்தின் டிரெய்லரை வெளியிட்டு படம் குறித்துப் பேசிய கமல், இரவில் தனது வீட்டில் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
இதில் ரஜினிகாந்த், மலையாள நடிகர்கள் மம்முட்டி, திலீப், நரேன் உள்ளிட்ட நடிகர்களும், முன்னணித் தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என பலரும் வந்திருந்தனர்.
விஜய்க்கும் அழைப்பு போயிருந்தது. இருப்பினும் அவர் விருந்துக்கு வரவில்லை. ஆனால் முன்னதாகவே வந்து கமல் ஹாசனை சந்தித்துப் பேசிச் சென்றார். விருந்துக்கு வந்த ஒவ்வொருவரிடமும் கமல்ஹாசன் தனித் தனியாக நேரம் செலவிட்டுப் பேசி மகிழ்ந்தாராம்.
+ comments + 1 comments
கமல் ரொம்ப பாசக்காரர்
http://oorpakkam.com/thiraiseithi/1621-kumgi-thirai-munnoddam
Post a Comment