மும்பை: பிக் பாஸ் 6 ரியாலிட்டி ஷோவில் புதிதாக ஒரு ஐட்டத்தைச் சேர்த்துள்ளனர். அவர் மிங் பிரார். மிங் மும்பையைச் சேர்ந்த மாடல் அழகி, டான்ஸர் மற்றும் நடிகை.
தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் மிங்க்கை நன்றாகவே தெரியும்... ஆனால் மிங்க் என்ற பெயரைச் சொன்னால் தெரியாது... என் சுவாசக் காற்றே படத்தில் இடம் பெற்ற ஜும்பலக்கா ஜும்பலக்கா பாடலைச் சொன்னால் நன்றாக தெரியும். அந்தப் பாட்டில், ராஜு சுந்தரம் மற்றும் அவரது குழுவினருடன் இணைந்து கலக்காலக ஆட்டம் போட்டாரே அவர்தான் மிங்க்.
நடன வடிவமைப்புக்காக வெகுவாகப் பேசப்பட்ட பாடல் அது. அதிலும் ராஜு சுந்தரத்தின் நுனுக்கமான டான்ஸ் மூவ்மென்ட்கள் அந்தப் பாடலை பெரிய ஹிட்டாக்கியது, மிங்க்கும் சேர்ந்ததால் பாடல் படு ஹாட்டாகவும் மாறியது.
பழங்கதை போதும்.. மிங்க் இப்போது பிக் பாஸ் 6 ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டுள்ளார். 1993ம் ஆண்டு தேவ் ஆனந்த்தால் சினிமாவுக்குக் கொண்டு வரப்பட்டவர் மிங்க். பாலிவுட்டில் சின்னச் சின்ன ரோல்களில் நடித்துள்ளார். குத்தாட்டம் போட்டுள்ளார். விளம்பரங்களில் நிறைய நடித்துள்ளார்.
பெரிய அளவில் பிரேக் கிடைக்காவிட்டாலும் கூட ஹாட்டான தனது பேச்சால் தொடர்ந்து லைம்லைட்டில் இருந்து வருபவர். நான் ஒரு லெஸ்பியன், இதைச் சொல்ல வெட்கப்படவில்லை என்று அதிரடியாக கூறியவர். பெண் ஒருவருக்கு அழுத்தமாக உதட்டு முத்தம் கொடுத்தும் பரபரப்பை ஏற்படுத்தியவர்.
இப்போது இவர் பிக் பாஸ் வீட்டுக்குள் புகுவதால் வீடே அதகளப்படும் என்பதில் ஐயமில்லை...!