பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் பில்லா நடிகை

|

Hazel Keech The Bigg Boss 6 House   

அஜீத்தின் பில்லா 1 படத்தில் நடித்த பிரபல மாடல் ஹசல் கீச் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் குடும்பத்தோடு இணைகிறார்.

பில்லா படத்தில் ‘செய் ஏதாவது செய்...' என்ற கருத்தாழம் மிக்க பாடலுக்கு நடனமாடியவர் ஹசல்கீச். பில்லா 1 படத்தில் நயன்தாரா, நமீதா என்ற இரண்டு கவர்ச்சி நாயகிகள் இருந்தாலும் இந்த பாடலுக்கு பிரபல மாடல் ஹசல் கீச் நடனமாடியது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

பிரபலமான விளம்பரங்களில் நடித்துள்ள ஹசல் கீச் இவர் பாடிகார்ட் இந்திப் படத்தில் சல்மான் கானுடன் நடித்திருக்கிறார். மேக்சிமம் என்ற இந்திப்படத்திலும் நடித்திருக்கும் இந்த கவர்ச்சிப் புயல் இப்போது பிக் பாஸ் சீசன் 6 ல் நுழைகிறார்.

யனா குப்தா முதலில் நிகழ்ச்சிக்கு வருவதாக இருந்தது. ஆனால் ஏனோ அவர் வரவில்லை. இப்போது ஹசல் கீச் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இது குறித்து கருத்து கூறியுள்ள ஹசல், ரியாலிட்டி ஷோவில் பங்கேற்பது மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியுள்ளார். கிம் கார்தஷியன் ஏற்கனவே இதுபோன்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று பிரபலமடைந்துள்ளார். தவிர சல்மான்கான் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார் என்பதால் இதில் பங்கேற்க நான் ஆர்வத்துடன் ஒப்புக்கொண்டேன் என்ற கூறியுள்ளார் ஹசல்.

ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் பிரபல கவர்ச்சிப் புயல்கள் மையம் கொண்டுள்ளன. இனி இந்த சூறவளி புகுந்து என்ன செய்யப்போகிறதோ தெரியலையே?

 

Post a Comment