சென்னை: நடிகை அனுஷ்கா திரையுலகினருக்கு சர்பிரைஸ் மேல் சர்பிரைஸ் கொடுத்து வருகிறார்.
அனுஷ்காவை தங்கள் படங்களில் நடிக்க வைக்க இயக்குனர்கள் போட்டி போடுகின்றனர். அவரும் டேட்ஸ் பார்த்து கால்ஷீட் தருகிறார். முடியவில்லை என்றால் தனது தோழிகளை நடிக்க வைக்க பரிந்துரை செய்கிறார். அவர் எந்த படத்திற்கும் 30 நாட்களுக்கு மேல் கால்ஷீட் கொடுக்கவே மாட்டார். இந்நிலையில் செல்வ ராகவனின் இரண்டாம் உலகம் படத்திற்கு முப்பதல்ல 60 நாட்கள் கால்ஷீட்டை பெரிய மனசுடன் கொடுத்தார்.
அட 60 நாட்கள் கால்ஷீட்டா அதுவும் அனுஷ்காவா என்று கோலிவுட்டே திகைத்துப் போனது. இந்நிலையில் அவர் கோலிவுட் மற்றும் டோலிவுட்டை திகைக்க வைத்துள்ளார். அதாவது அவர் தான் நடிக்கும் ராணி ருத்ரம்மா தேவி படத்திற்கு யாருமே கனவில் கூட நினைத்துப் பார்க்காத வண்ணம் 150 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார்.
தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்த படம் 13ம் நூற்றாண்டில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்படுகிறது. இதற்கு இசை ஞானி இளையராஜா இசையமைக்கிறார்.
Post a Comment