சென்னைக்குத்தாம்பா ஆதரவு கொடுத்தேன்... திரிஷா புலம்பல்!

|

I Supported Csk Not Kkr Says Trisha   
ஐபிஎல் இறுதிப் போட்டியில் நான் சென்னை சூப்பர் கிங்ஸுக்குத்தான் ஆதரவு கொடுத்தேன் என்று பதறியடித்துப் போய்க் கூறியுள்ளார் திரிஷா.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று ஐபிஎல் இறுதிப் போட்டி நடந்தது. சென்னை அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸும் மோதின. இதில் கொல்கத்தா வெற்றி பெற்றது.

போட்டியைக் காண பல திரைப்பட பிரபலங்கள் குவிந்திருந்தனர். கொல்கத்தாவுக்கு ஆதரவு தெரிவித்து ஜெனிலியா, பாடகி உஷா உதுப் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

அதேபோல சென்னை அணிக்கு ஜெயம் ரவி, உமா ரியாஸ் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்திருந்தனர். நம்ம திரிஷாவையும் ஸ்டேடியத்தில் காண முடிந்தது.

ஆனால் அவர் கொல்கத்தா ரசிகர்கள் மத்தியில் உட்கார்ந்திருந்தார. இதனால் அவர் கொல்கத்தாவுக்கு ஆதரவாக இருந்துள்ளதாக பேச்சு வெடித்தது. கொல்கத்தா வேறு வெற்றி பெற்றதால் திரிஷா மீது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் திரிஷா மீது காட்டமாகியுள்ளனர். டிவிட்டர் மூலமும், பிளாக்குள் மூலமும் திரிஷாவைத் திட்டித் தீர்த்து வருகின்றனராம்.

இது திரிஷாவின் காதுகளுக்குப் போய் அவர் களேபரமாகி விட்டார். நான் எப்போதுமே சென்னையின் ரசிகைதான். நேற்றும் கூட சென்னைக்குத்தான் ஆதரவு கொடுத்தேன். எனது நெருங்கிய தோழி சபீனா கான் அங்கிருந்ததால் அவர் பக்கத்தில் போய் உட்கார்ந்தேன். மற்றபடி நான் கொல்கத்தாவையெல்லாம் ஆதரிக்கவி்ல்லை, சாமி. தயவு செய்து விட்டுடுங்க என்று புலம்பியுள்ளார்.

விடுங்கப்பா, விடுங்கப்பா...
Close
 
 

Post a Comment