பாரதிராஜா பட ஆடியோ வெளியீட்டுக்கு வீடியோ மூலம் ரஜினி 'வாய்ஸ்'!

|

Rajini S Special Video Treat Madurai Fans

சென்னை: இன்று மாலை மதுரையில் நடக்கும் அன்னக்கொடியும், கொடிவீரனும் இசை வெளியீட்டு விழாவுக்கு வர முடியாத ரஜினிகாந்த் வீடியோ மூலம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கவிருக்கிறார்.

பாரதிராஜா இயக்கியுள்ள அன்னக்கொடியும், கொடிவீரனும் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை 4 மணிக்கு மதுரையில் நடக்கிறது. இந்த விழாவில் தனது முதல் படமான 16 வயதினிலே-வில் இணைந்து நடித்த ரஜினிகாந்த், கமல் ஹாசன் மற்றும் ஸ்ரீதேவியை கலந்து கொள்ள வைக்க பாரதிராஜா முயற்சி செய்தார். ஆனால் பல்வேறு காரணங்களால் அது சாத்தியமாகவில்லை.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு வருவதாகக் கூறிய ரஜினியால் தற்போது வர முடியவில்லையாம். இருப்பினும் தான் விழாவுக்கு வருவேன் என்ற எதிர்பார்ப்பில் வரும் தனது ரசிகர்களை அவர் ஏமாற்ற விரும்பவில்லை. இதனால் வீடியோவில் பேசி அதை அனுப்பி வைத்துள்ளார். நிகழ்ச்சியின்போது அந்த வீடியோ ரசிகர்களுக்கு போட்டுக் காட்டப்படும்.

இந்த விழாவில் இசைஞானி இளையராஜா, இயக்குநர்கள் பாலு மகேந்திரா, மணிரத்தினம், வடிவேலு, சத்யராஜ், சரத் குமார், ராதிகா, ராதா, கௌதம் மேனன், சேரன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

 

Post a Comment