சென்னை: சமந்தா நடிகர் சித்தார்த்தை காதலிப்பதாக தகவல் பரவி வருகிறது.
சமந்தா சித்தார்த்துடன் சேர்ந்து ஜபர்தஸ்த் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமந்தா சித்தார்த்தை டேட் செய்வதாக தெலுங்கு திரையுலகில் பேச்சாகக் கிடக்கிறது. அவர்கள் இருவரும் சேர்ந்து அமெிரிக்காவில் விடுமுறையைக் கழித்ததையடுத்து தான் இந்த காதல் கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன.
பத்தாக்குறைக்கு எனக்கு பாய் பிரண்ட் இருக்கிறார் என்று சமந்தா அண்மையில் கூறினார். இது போதாதா காதல் கிசுகிசு பரவ. ஆனால் சமந்தாவிடம் கேட்டால் நடிகைகளுக்கே உரிய பாணியில் சீச்சீ நான் சித்தார்த்தை காதலிக்கவில்லை. நாங்கள் நல்ல நண்பர்கள் என்று மலுப்பலான பதிலை அளித்துள்ளார்.
அவர்களுக்குள் நெருக்கம் இருக்கிறதாம் ஆனால் அது காதல் இல்லையாம். மேலும் தனது காதல் வாழ்க்கை தனது தனிப்பட்ட விஷயம் அதை அவ்வாறே வைத்துக்கொள்ள விரும்புவதாகவும் சமந்தா கூறியுள்ளார். இது போன்ற வதந்திகளுக்கெல்லாம் விளக்கம் அளிப்பது தேவையில்லாதது என்றும் தெரிவித்துள்ளார்.
சித்தார்த் முன்னதாக ஸ்ருதி ஹாசனை காதலித்து வந்தார். மும்பையில் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து பிரிந்துவிட்டனர்.
Post a Comment