துப்பாக்கியை அடுத்து 'கடல்' சாட்டிலைட் உரிமத்தை வாங்கிய விஜய் டிவி

|

Vijay Tv Bags Kadal Television Rights   

சென்னை: மணிரத்னத்தின் கடல் படத்தின் சாட்டிலைட் உரிமத்தை விஜய் டிவி வாங்கியுள்ளது.

மணிரத்னத்தின் இயக்கத்தில் கௌதம் கார்த்திக், துளசி நாயர் அறிமுகமாகும் கடல் படத்தின் சாட்டிலைட் உரிமத்தை விஜய் டிவி வாங்கியுள்ளது. முன்னதாக இந்த சேனல் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் நடித்த துப்பாக்கி படத்தின் சாட்டிலைட் உரிமத்தை வாங்கியது. இந்த இரண்டு படங்களின் சாட்டிலைட் உரிமையையும் ஜெமினி பிலிம் சர்கியூட்டிடம் இருந்து பேக்கேஜ் டீலாக யாருக்கும் தெரிவிக்காத விலைக்கு வாங்கியுள்ளது.

பெரிய படங்களின் சாட்டிலைட் உரிமத்தை வாங்குவதில் சன் டிவி, ஜெயா டிவி போட்டி போடுகையில் சத்தமில்லாமல் விஜய் டிவி கடலின் உரிமத்தை வாங்கிவிட்டது. அண்மை காலமாக விஜய் டிவி புது படங்களின் சாட்டிலைட் உரிமத்தை பெற அதிக ஆர்வம் காட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜயின் துப்பாக்கி சூப்பர் ஹிட் ஆனது. கடல் படத்தில் கார்த்திக், ராதாவின் பிள்ளைகள் நடித்திருப்பதால் படம் எப்பொழுது வரும் என்று ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

கடல் - அதிகாரப்பூர்வ டிரெய்லர்

 

Post a Comment