நியூ ஜெர்சி: அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் வரும் 23ம் தேதி இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது.
நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கமும், ஐ ட்ரீம் மீடியாவும் சேர்ந்து இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன. இந்த நிகழ்ச்சி நியூ ஜெர்சியில் உள்ள ப்ருடென்ஷில் சென்டரில் வரும் 23ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இளையராஜாவுடன் பிரபல பின்னணி பாடகர்கள் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், ஹரிஹரன், மனோ, கார்த்திக், விஜய் யேசுதாஸ், பாடகிகள் சித்ரா, சாதனா சர்கம், ஸ்வேதா மோகன் மற்றும் இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிகழ்ச்சி குறித்து மேலும் விவரம் அறிய விரும்புவோர் njtamilsangam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இமெயில் அனுப்பிலாம். அல்லது 732-800-2336 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த நிகழ்ச்சிக்கான நுழைவு டிக்கெட் வினியோகம் துவங்கிவிட்டது.
Post a Comment