பிரசன்னா - சினேகா காதலுக்கு அடித்தளம் போட்டு, அதைத் திருமணம் வரை கொண்டு வந்த பெருமை அருண் வைத்தியநாதனுக்கு உண்டு.
அவர்தான் இருவரையும் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் ஜோடியாக நடிக்க வைத்தவர். படப்பிடிப்பின்போது ஒத்திகைக்காக இருவரும் ஒரே வீட்டில் தங்கும்படியான ஏற்பாட்டையும் செய்தவர். அதுவே இருவருக்கும் நெருக்கமான காதலாகிவிட்டது.
எதற்கு இந்தக் கதை என்கிறீர்களா...
சாதாரணமாக இருந்தவர்களை கணவன் - மனைவியாக்கிய அருண்... இப்போது அந்த ஜோடியைப் 'பிரித்து' கணவனை மட்டும் மீண்டும் கதாநாயகனாக்கியிருக்கிறார் கல்யாண சமையல் சாதம் படத்தில்.
ஆனால் அருண் வைத்தியநாதன் இதில் தயாரிப்பாளர் மட்டுமே. குறும்பட இயக்குநர் ஆர் எஸ் பிரசன்னா இயக்குகிறார். ஒரு திருமணம் , அதைச் சுற்றி நடக்கும் பல வேடிக்கையான சம்பவங்களை மையமாக வைத்து வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் விதத்தில் இந்த படத்தை உருவாக்கி வருகிறாராம் இயக்குநர். திருமணத்துக்குப் பிறகு பிரசன்னா ஒப்பந்தமாகியுள்ள முதல் படம்.
டெல்லி கணேஷ், உமா பத்மநாபன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இதில் பிரசன்னாவுக்கு ஜோடி, லேகா வாஷிங்டன்.
அருண், திரும்பவும் ஹீரோ ஹீரோயினுக்கு வீடு எடுத்துக் கொடுத்துடாதீங்க!!
Post a Comment