சென்னை: அஜீத்துடன் இணைந்து படம் பண்ணும் திட்டம் எதுவும் இப்போதைக்கு இல்லை. இதுபற்றி வருவதெல்லாம் யூகங்களே என்று இயக்குநர் முருகதாஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஒரு படம், சிவா இயக்கத்தில் இன்னொரு படம் என நடித்துக் கொண்டிருக்கும் அஜீத், அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பார் என செய்திகள் கிளம்பின.
சில தினங்களுக்கு முன் கிட்டத்தட்ட இந்த புராஜெக்ட் உறுதி எனும் அளவுக்கு பேசப்பட்டது. தலைப்பு கூட ரெட்டைத் தலை என்று வைத்ததாகக் கூறப்பட்டது.
இதனை தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் மறுத்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, "என்னுடைய இயக்கத்தில் அஜீத் நடிப்பதாக வெளிவந்த செய்திகளை நானும் படித்தேன். சரி நல்ல விஷயம்தானே என்று பதில் ஏதும் சொல்லவில்லை. ஆனால் அவை எல்லாமே யூகத்தின் அடிப்படையிலான செய்திகள்.
அஜீத்துடன் ஒரு படம் பண்ண வேண்டும் என்ற ஆசை எனக்கும் உண்டு. அவருக்கும் உண்டு. ஆனால் அதற்கான நேரம் இன்னும் வரவில்லை. வரும்போது சேர்ந்து பணியாற்றுவோம்.
நான் இப்போது ‘துப்பாக்கி' இந்தி ரீமேக்கில் பிசியாக இருக்கிறேன். அக்ஷய்குமார், சோனாக்ஷி சின்ஹா நடிக்கிறார்கள். இதற்கே எனக்கு ஒரு வருடம் ஆகிவிடும்", என்றார்.
Post a Comment