விஸ்வரூபம் படத்தின் கர்நாடக விநியோகஸ்தர் கங்கராஜ் பெங்களூரில் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கமல்ஹாஸன் கூறுகையில், "விஸ்வரூபம் முதல் பாகத்துக்கு காத்திருந்தது போல, அடுத்த பாகத்துக்கு காத்திருக்கத் தேவையில்லை. சீக்கிரமே அந்தப் படம் வந்திவிடும்.
இந்தப் படத்தின் தலைப்பு 'மூ'. இதைப் பதிவு செய்துவிட்டேன். முதல் பாகத்தில் நடித்தவர்களே இரண்டாம் பாகத்தில் தொடர்வார்கள். ஓரிரு பாத்திரங்கள் புதிதாக வரலாம்," என்றார்.
கமல் ஹாஸன் விஸ்வரூபம் படத்தை கடந்த மே மாதமே முடித்துவிட்டார். அதன் இரண்டாம் பாகத்தின் பெரும்பகுதியை முடித்து, கூடவே போஸ்ட் புரொடக்ஷன் பணிகளையும் முடித்து வைத்துள்ளார். இந்தப் படத்தை வெளியிட்ட கையோடு அவர் அமெரிக்காவுக்குப் போவதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.
எனவே அவர் சொல்வது போல, இந்த இரண்டாம் பாகம் சீக்கிரமே வெளியாகக் கூடும். அதனால்தான் விளம்பரத்தை இப்போதிலிருந்தே ஆரம்பித்துவிட்டார் போலிருக்கிறது!
Post a Comment