டெல்லி: கோடீஸ்வர்ர் வீட்டு திருமண விழாவில் நடனமாட பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மூன்றரை கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லியை சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபர் வீட்டு திருமணம் வியாழக்கிழமை வெகு ஆடம்பரமாக நடைபெற்றது.
திருமண அரங்கில் சூதாட்டம், குத்தாட்டம் என அத்தனை பொழுதுப்போக்கு அம்சங்களும் படு அமர்க்களமாக களை கட்டியிருந்தன. சூதாட்டத்தில் வென்ற அதிர்ஷ்டசாலிகளுக்கு ஆடம்பர கார்களும், லண்டன் சென்றுவர விமான டிக்கெட்டுகளும் பரிசாக வழங்கப்பட்டன.
பாலிவுட் பிரபலங்களின் திருமண ஆடம்பரங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளும் வகையில் நடைபெற்ற இந்த திருமண விழாவில் மாப்பிள்ளை அழைப்பு உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் பணம் தண்ணீராக இறைக்கப்பட்டதாம்.
இந்த திருமணத்தில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடனமாடினார். ஓர் இரவுக்கு நடனமாடுவதற்கு சல்மான் கானுக்கு ரூ. 3 1/2 கோடி வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Post a Comment