ஹைதராபாத்: நடித்த படங்கள் ஆகா ஒகோ என்று ஓடினால் பிஸியாக விமானத்தில் பறப்பது திரை நட்சத்திரங்களில் வாடிக்கை. அதே படம் ஊற்றிக்கொண்டால், ஜோசியம், ஜாதகம் என்று பார்த்து கோவில் கோவிலாக சுற்றி வருவதும் நடப்பதுதான்.
இந்த பட்டியலில் நடிகை அனுஷ்கா இணைந்துள்ளார். அவர் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ஆந்திராவில் உள்ள சில முக்கிய ஸ்தலங்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வருகிறாராம். அதுமட்டுமின்றி, தனது சார்பில் அங்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் செய்து வருகிறாராம்.
சமீபத்தில் குடும்பத்தோடு ஸ்ரீ காளஹஸ்தி வந்த அனுஷ்கா அங்கு நடைபெற்ற ராகு கேது பூஜையில் பயபக்தியோடு பங்கேற்றாராம். எதற்காக இந்த சிறப்பு பூஜை அன்னதானம் என விசாரித்தால், இவருடைய ஜாதகத்தில் சில கிரகங்கள் எதிர்மறையான வேலைகள் செய்கிறதாம். அவை பெரிய அளவில் தாக்காமல் தவிர்க்க ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று அன்னதானமும் பரிகார பூஜைகளும் செய்து வந்தால் நிவர்த்தியாகும் என குடும்ப ஜோதிடர் கூறியதால், அவருடைய ஆலோசனையின் பேரிலேயே இதை செய்து வருகிறாராம்.
அனுஷ்கா கடைசியாக தமிழில் நடித்த தாண்டவம், அலெக்ஸ் பாண்டிய்ன இரு படங்களும் தோல்வியை தழுவியுள்ளதால், ஜோதிடர் சொன்னது உண்மைதான் என்று நம்பத் தொடங்கிவிட்ட அனுஷ்கா இப்படி கோயில் கோயிலாக சுற்றி வருகிறார் என்று பேசிக்கொள்கின்றனர்.
இனியாவது நல்ல காலம் வந்தால் சரிதான்...
Post a Comment