டபுள் மீனிங் டயலாக் கிடையாது... முடிவெடுத்த சந்தானம்

|

No More Double Meaning Dialogue Future Says Santhanam

ஹீரோக்களுக்கு தோழன் என்றால் கூப்பிடு சந்தானத்தை என்று கூறும் அளவிற்கு பிஸியாகிவிட்டார் நகைக்சுவை நடிகர் சந்தானம். பல படங்கள் ஓடினாலும் சில படங்கள் கவிழ்த்து விடத்தான் செய்துள்ளன. அதற்கு சமீபத்திய உதாரணம் அலெக்ஸ் பாண்டியன் படத்தில் டபுள் மீனிங் டயலாக்தானாம்.

இது சந்தானத்தை மட்டுமல்ல கார்த்திக்கும் சேர்த்துக் குழிபறித்துவிட்டதுத்தான் சோகம். இதனால் உஷாராவிட்ட சந்தானம் இனி டபுள் மீனிங் டயலாக்குகளை பேசுவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறாராம்.

அவரின் இந்த முடிவுக்கு தலைவன் படத்தின் ஹீரோ பாஸ்கர்தான் காரணமாம். தலைவன் படத்தில் பாஸ்கரும், சந்தானமும் ஜோடி போட்டு நகைச்சுவையில் கலக்கியிருக்கின்றனராம். முந்தைய படங்களைப் போல இல்லாமல் இந்தப் படத்தின் நகைச்சுவையில் ஒரு நாகரீகம் வெளிப்பட்டிருக்கிறதாம்.

தலைவனில் சந்தானம் கிட்டத்தட்ட இரண்டாவது ஹீரோ என்கிறார்கள். காமெடி சீன்களில் பாஸ், மற்றும் சந்தானம் வரும் காட்சிகளில் சிரித்து சிரித்து வயிற்றுவலி உத்தரவாதம் என்றும் சொல்கிறார்கள்.

‘பாஸ்' அரசியலில் இருந்தபோது சிலருக்கு வயிற்றைக் கலக்க வைத்தார். இப்போது, வயிறு வலிக்க சிரிக்கவும் வைக்கிறாராம். படம் வந்தால்தான் தெரியும்.

அரசியல் பின்னணியில் இருந்து நடிக்க வந்த ‘தி.மு.க.' உதயநிதி ஸ்டாலினுக்கும், ஒரு கல் ஒரு கண்ணாடியில் கை கொடுத்தவர் சந்தானம்தான். தற்போது ‘அ.தி.மு.க.' பாஸ் வரும்போது கூட கைகொடுப்பதும் சந்தானம்தான்.

 

Post a Comment