சென்னை கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படத்துக்கான முன்பதிவு தியேட்டர்களில் இன்று தொடங்கியது. தொடங்கிய சில மணி நேரங்களிலேயே ஒரு வாரத்திற்கான டிக்கெட் முன்பதிவாகி விட்டதாக செய்திகள் கூறுகின்றன.
விஸ்வரூபம் பெரும் இடியாப்பச் சிக்கலில் சிக்கி வருமா, வராதா என்ற கேள்விகளில் உழன்று ஒரு வழியாக வியாழக்கிழமை திரைக்கு வருகிறது. கமல்ஹாசன் சென்டிமென்ட்டை நம்புவதில்லை என்பதால் வெள்ளிக்கிழமைக்குப் பதில் வியாழக்கிழமையே படத்தைத் திரைக்குக் கொண்டு வருகிறார் என்று கூறுகிறார்கள்.
தமிழகம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் விஸ்வரூபம் திரையிடப்படுகிறது. இதையடுத்து கமல்ஹாசன் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் படம் பார்க்கத் தயாராகி வருகின்றனர்.
இதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது. படம் திரையிடப்படும் தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. முன்பதிவு செய்வதில் ரசிகர்கள் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சென்னையில் ...
சென்னையைப் பொறுத்தவரை, சத்யம், சாந்தம், தேவி, சாந்தி, உட்லண்ட்ஸ், எஸ்கேப், அபிராமி, ஸ்வர்ணசக்தி, சங்கம், உதயம், மினி உதயம், ஏ.ஜி.எஸ்., கமலா, பைலட், மோட்சம், சைதை ராஜ், எஸ்.எஸ்.ஆர். பங்கஜம், பெரம்பூர் எஸ்.2, பாரத், ஸ்ரீபிருந்தா, மகாராணி, எம்.எம். தியேட்டர், மாயாஜால், பிரார்த்தனா, ரோகிணி, திருவான்மியூர் எஸ்.2, கணபதிராம், வெற்றி, கொளத்தூர் கங்கா, மூலக்கடை சண்முகா, ராக்கி, முருகன், பூந்தமல்லி சுந்தர் உள்ளிட்ட பல்வேறு தியேட்டர்களில் படம் திரையிடப்படுகிறது. புறநகர்களிலும் ஏராளமான தியேட்டர்களில் வி்ஸ்வரூபம் திரையிடப்படவுள்ளது.
இங்கு அதிகாலை முதலே பெரும் திராளானோர் கூடி முன்பதிவு செய்தனர். முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே ஒரு வாரத்திற்கான டிக்கெட் முன்பதிவு முடிந்து போய் விட்டதாக செய்திகள் கூறுகின்றன.
Post a Comment