அமீரின் 'ஆதிபகவன்'... படத்தை போட்டுக் காட்ட இந்து மக்கள் கட்சி கோரிக்கை!

|

Third Complaint Against Aadhi Bhagavan

அமீர் இயக்கியுள்ள ஆதிபகவன் படத்துக்கு எதிராக மேலும் ஒரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தப் படத்துக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

இந்துக்கள் மனதைப் புண்படுத்தும் காட்சிகள் உள்ளதாகக் கூறப்படும் இந்தப் படத்தை முன்கூட்டியே எங்களுக்குக் காட்ட வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை தலைமைச் செயலகத்தில் புகார் தரப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் தனசிங் சென்னை கோட்டையில் முதல்வரின் தனிப்பிரிவில் கொடுத்துள்ள புகார் மனுவில், "ஆதிபகவன்' படத்தில் இந்து சமய நம்பிக்கையை புண்படுத்தும் காட்சிகள் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

பெரும்பான்மை மக்களின் உணர்வுகளுக்கு எதிரான காட்சிகளை அனுமதிக்கக் கூடாது. எனவே பட ரிலீசுக்கு முன் இந்து அமைப்புகளுக்கு இந்தப் படத்தை திரையிட்டு காட்டவேண்டும்," என்று கோரியுள்ளார்.

அமீர் இயக்கியுள்ள ஆதிபகவன் படத்தில் ஜெயம் ரவி, நீத்து சந்திரா நடித்துள்ளனர். திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்துக்கு எதிராக வந்துள்ள மூன்றாவது புகார் இது. எனவே பதட்டத்தில் உள்ளது ஆதிபகவன் குழு.

 

Post a Comment