ஏஜிஎஸ் படம் மூலம் வைகைப் புயல் வடிவேலுவின் மறுபிரவேசம் பற்றி சொல்லியிருந்தோம் அல்லவா... இதோ இப்போது அவரது அடுத்த படம் குறித்த புதிய தகவல்கள்.
இந்தப் புதிய படமும் சரித்திர சம்பவங்களை வைத்துதான் எடுக்கப்படுகிறது. இதில் அவர் ஏற்கும் வேடம் எவர்கிரீன் தெனாலிராமன். தெனாலிராமன் இருந்தால், கிருஷ்ணதேவராயரும் இருக்க வேண்டுமல்லவா... அந்த வேடத்திலும் வடிவேலுதான் நடிக்கிறார்.
இதன் மூலம் இரண்டாண்டு இடைவெளியை வட்டியும் முதலுமாக சேர்த்து சரிகட்டப் போகிறார் வடிவேலு.
படத்தை இயக்குபவர் யுவராஜ். சில மாதங்களுக்கு முன்பு கிரிக்கெட்டை மையமாக வைத்து போட்டா போட்டி என்ற படத்தை காமெடியாகத் தந்த அதே யுவராஜ்தான்.
இம்சை அரசனைப் போல புத்திசாலித்தனமான சடையர் ஆக உருவாக்கப்பட்டிருந்த இந்தக் கதையைக் கேட்டு வடிவேலு மகிழ்ந்துபோய், இவரை இயக்குநராக சிபாரிசு செய்தாராம்!
Post a Comment