கதை திரைக்கதை வசனம் இயக்கம் பார்த்திபன்!

|

Parthiban S New Movie Title

வித்தியாசமான பரிசுகள், புதுமையான கதைகளுக்கு மட்டுமல்ல... ஆச்சரியப்படுத்தும் தலைப்புகளுக்கும் சொந்தக்காரர் இயக்குநர் - நடிகர் ஆர் பார்த்திபன்.

தனது அடுத்த படத்துக்கு இவர் வைத்துள்ள தலைப்பு - 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்!'

வித்தகன் படத்துக்குப் பிறகு, புதிய பாதை 2-ஐ இயக்கும் பணிகளில் மும்முரமாக உள்ளதாக பார்த்திபன் அறிவித்திருந்தார்.

இதற்கிடையில் அவர் ஜன்னல் ஓரம் என்ற படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

அத்துடன் இந்தப் புதிய படத்தின் வேலைகளையும் தொடங்கியுள்ளார். இதுகுறித்து ஆர் பார்த்திபனின் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டோம்.

"இப்படி ஒரு தலைப்பில் படம் பண்ணப் போவது உண்மைதான்.

புதிய பாதை 2 - படமும் பார்த்திபன் இயக்கத்தில் வெளிவரவிருக்கிறது," என்றார் பார்த்திபனின் உதவியாளர்.

 

Post a Comment