'பிராணிகளுக்கு பதிலாக பாலியல் குற்றவாளிகளை பரிசோதனைக்கு பயன்படுத்தலாம்!” – திரிஷா

|

Trisha Says Why Do Tests On Animal   

சென்னை: பரிசோதனைக் கூடங்களில் முயல், எலி போன்ற அப்பாவி விலங்குகளை பயன்படுத்துவதை விட பாலியல் குற்றவாளிகளை பரிசோதனைக்கு உட்படுத்தலாம் என்று திரிஷா சிபாரிசு செய்துள்ளார்.

நாடு முழுவதும் புதிய மருந்து கண்டுபிடிப்புக்கான லேப்களில் நிறைய முயல், எலி போன்றவைகளை அடைத்து வைத்து அவற்றுக்கு மருந்தை செலுத்தி பரிசோதனை நடத்துகிறார்கள். இந்த முறையை தடை செய்ய வேண்டும் என்று திரிஷா கண்டித்துள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் ,"நான் பிராணிகள் பாதுகாப்பு அமைப்பில் இருக்கிறேன். பரிசோதனை கூடங்களில் பிராணிகள் பயன்படுத்துவதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இதற்கு தடை விதிக்கப்பட வேண்டும்.

ஜெயிலில் நிறைய குற்றவாளிகள் உள்ளனர். குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்தவர்களும் சிறையில் இருக்கிறார்கள். பரிசோதனைக் கூடங்களில் அப்பாவி விலங்குகளுக்கு பதிலாக இந்த குற்றவாளிகளை பரிசோதனைக்கு பயன்படுத்தி தண்டிக்கலாம். "இவ்வாறு திரிஷா கூறினார்.

நடிகை திரிஷா பிராணிகள் பாதுகாப்பு அமைப்புக்கு உதவியாக இருக்கிறார். தெரிவில் திரியும் நாய்களை பிடித்து வளர்த்து தத்து கொடுக்கவும் செய்கிறார். தற்போது பரிசோதனைக் கூடங்களில் எலி, முயலை பயன்படுத்துவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

+ comments + 1 comments

9 February 2013 at 13:09

will those who circulate their nude bathroom videos should also be considered for same punishment

Post a Comment