லண்டன்: இங்கிலாந்தில் தொடர்ந்து 3வது வாரமாக அரங்கு நிறைந்த காட்சிகளாக விஸ்வரூபம் ஓடி வருகிறது. மேலும் ரசிகர்களின் கோரிக்கையைத் தொடர்ந்து மேலும் 15 இடங்களில் விஸ்வரூபம் திரையிடப்பட்டுள்ளதாக அதன் வெளியீட்டாளரான ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி15ம் தேதிக்குப் பி்ன்னர் மேலும் பல தியேட்டர்களில் விஸ்வரூபம் திரையிடப்படவுள்ளதாகவும் ஐங்கரன் தெரிவித்துள்ளது.
விஸ்வரூபம் படம் இங்கிலாந்தில் சூப்பர் ஹிட் ஆகியுள்ளதாக கூறியுள்ள ஐங்கரன் நிறுவனம், படத்திற்கு திரும்பத் திரும்ப ரசிகர்கள் வருவதாகவும் தெரிவித்துள்ளது.
Post a Comment